ஆற்றில் தத்தளித்த நாய் – காப்பாற்ற சென்றவர்கள் பார்த்த உறைய வைக்கும் காட்சி !

Webdunia
புதன், 8 ஜனவரி 2020 (11:09 IST)
இங்கிலாந்து நாட்டில் தாங்கள் வளர்த்த நாயை கல்லைக் கட்டி ஆற்றில் போட்ட தம்பதிகளைப் போலிஸார் விசாரித்து வருகின்றனர்.

இங்கிலாந்து நாட்டில் அமைந்துள்ள ட்ரண்ட் ஆற்றில் நாய் ஒன்று தத்தளித்துக் கொண்டிருந்தது. இதைப்பார்த்த சிலர் மீட்புப் படையினருக்குத் தகவல் சொல்லவே உடனடியாக விரைந்து சென்றனர். நாயைக் காப்பாற்ற முயன்ற அவர்கள் நாயை எளிதாகத் தூக்க முடியாமல் திணறியுள்ளனர். அப்போதுதான் அவர்களுக்குத் தெரிந்துள்ளது நாயின் கழுத்தில் உள்ள கயிற்றின் மறுமுனையில் கல் ஒன்று கட்டப்பட்டிருப்பது.  நீண்ட போராட்டத்துக்கு பின் நாயை உயிரோடு காப்பாற்றி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதையடுத்து கழுத்தில் இருந்த சிப்பை வைத்து அது யாருடையது எனக் கண்டுபிடித்துள்ளனர். பின்னர் அவர்களைத் தேடி கண்டுபிடித்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்