இந்த போட்டியில் முதல் ஓவரின் முதல் பந்திலேயே இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் எல்கர் ஆட்டமிழந்தார். இதனை அடுத்து டீகாக் சுதாரித்து விளையாடி 95 ரன்கள் எடுத்ததால் தென் ஆப்பிரிக்க அணியின் 284 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில்ஆட்டமிழந்தது . இதனை அடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டென்லி மட்டும் ஓரளவுக்கு நிதானமாக ஆடிய 50 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. அந்த அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 70 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளதால் இந்த போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் கண்டிப்பாக முடிவு தெரியும் என்றே கிரிக்கெட் வர்ணனையாளர் கருத்து தெரிவித்து வருகின்றனர்