ராஜஸ்தான் மாநிலம் ஒரு நீல நிற பிளாஸ்டிக் பேரலுக்குள் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mahendran

திங்கள், 18 ஆகஸ்ட் 2025 (14:32 IST)
உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த சூரஜ் என்பவர் ஒரு செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்தார். ஹன்ஸ்ராஜ் தனது மனைவி சுனிதா மற்றும் மூன்று குழந்தைகளுடன் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வாடகைக்கு வசித்து வந்துள்ளார். சனிக்கிழமை முதல் அவர்கள் நால்வரும், வீட்டின் உரிமையாளரின் மகன் ஜிதேந்திராவும் காணவில்லை. 
 
இதையடுத்து வீட்டின் உரிமையாளரின் மனைவி மித்லேஷ் சர்மா, மேல் மாடியில் இருந்து துர்நாற்றம் வருவதாக கூறிய நிலையில் உடனே காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த நீல நிறப் பேரலின் மீது ஒரு கனமான கல் வைக்கப்பட்டிருப்பதை கண்டனர்.  உள்ளே, ஹன்ஸ்ராஜின் உடல் உப்பு போட்டு மூடப்பட்டிருந்ததாகவும், அவருடைய தொண்டை அறுக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது.
 
பாதிக்கப்பட்டவரின் மனைவி, குழந்தைகள் மற்றும் வீட்டின் உரிமையாளரின் மகன் ஜிதேந்திரா ஆகியோர்  திடீர் மறைவுக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 
காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து, காணாமல் போன மனைவி, குழந்தைகள் மற்றும் ஜிதேந்திராவை தேடி வருகின்றனர். சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தடயவியல் நிபுணர்கள் குழுவும் சம்பவ இடத்திலிருந்து மாதிரிகளைச் சேகரித்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்