ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 6.1 பதிவு

Webdunia
வியாழன், 19 அக்டோபர் 2017 (17:30 IST)
ஜப்பானில் இன்று 6.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 


 

 
ஜப்பானின் தெற்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கியூஷூ தீவில் இருந்து சுமார் 682 கி.மீ. தொலைவில் பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நலநடுக்கம் மையம் கொண்டிருந்தது என அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியிருந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதனால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்