ஹைட்ரஜன் குண்டு சோதனை; நிலநடுக்க அபாய எச்சரிக்கை!!

வெள்ளி, 13 அக்டோபர் 2017 (15:34 IST)
உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வந்தது. இதனால் வடகொரியா மீது பல பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டது.


 
 
கடந்த மாதம் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று இலக்கை தாக்கி அழிக்கும் அதி நவீன ஏவுகணை சோதனையையும் நடத்தியது.
 
இந்நிலையில், வடகொரிய தற்போது ஹைட்ரஜன் குண்டை பரிசோதனை செய்து பார்த்திருக்க கூடும் என்ற தகவல்  வெளியாகியுள்ளது. 
 
வடகொரியாவின் முந்தைய அணுசக்தி சோதனைகள் போது 4.3 அளவில் நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது இந்த ஹைட்ரஜன் குண்டு சோதனையால் 6.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்