பேரழிவுக்கு அஞ்சலி நிகழ்ச்சி முடிந்தவுடன் தாக்கிய அடுத்த பேரழிவு; ஆட்டம்கண்ட மெக்சிகோ

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2017 (10:53 IST)
அமெரிக்காவின் மெக்சிகோ நாட்டில் 7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 149 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
அமெரிக்காவின் மெக்சிகோ நாட்டில் நேற்று நள்ளிரவு சக்திவாய்ந்த நிகநடுக்கம் ஏற்பட்டது. இது 7.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதனால் பல பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமானது.
 
இதில் தற்போது வரை சுமார் 149 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கட்ட்டிட இடிபாடுகளுக்கிடையே பலர் சிக்கியுள்ளதால் உயிர் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
 
மெக்சிகோவில் 1985ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 5000 பலியானது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்றுதான் நடைபெற்றது. நிகழ்ச்சியின்போது நிகநடுக்க பாதுகாப்பு ஒத்திகைகளும் நடத்தப்பட்டன. நிகழ்ச்சி முடிந்த சில மணி நேரங்களிலே இந்த பேரழிவு நடந்துள்ளது. 
 
இந்த நிகழ்வு உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மெக்சிகோவில் ஒரே மாதத்தில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் இது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்