கடந்த 2011-ஆம் ஆண்டு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தலைமை ஆசிரியர் ஒருவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் அந்த தலைமை ஆசிரியருக்கு தற்போது அதிரடி தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது நீதிமன்றம்.
மதுரை அருகே பொதும்பு அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார் ஆரோக்கியசாமி என்பவர். இவர் மீது கடந்த 2011 ஆம் ஆண்டு 24 மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் மாதர் சங்கம் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதில் குறிப்பிட்ட அந்த தலைமை ஆசிரியர் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் அந்த தலைமை ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது இதனை விசாரித்த நீதிபதி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்த தலைமை ஆசிரியருக்கு 55 ஆண்டுகள் சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டார்.