பூகம்பத்தை முன்கூட்டியே கண்டறியும் தொழில்நுட்பம்: ஆபத்தை தடுக்க புது யுக்தி

Webdunia
வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (21:10 IST)
ஒரு பூகம்பத்தை தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெறும் நடுக்கங்களை இயந்திர கற்றல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அறிவதற்கு விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர்.
 
கடந்த 2011 ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் உட்பட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பூகம்பங்கள் மற்றும் பிந்தைய நடுக்கங்கள் இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. 
 
அதாவது, பிரதான பூகம்பத்தை தொடர்ந்து நடைபெறும் பிந்தைய நடுக்கங்கள் வரையறையின்படி சிறியதாக கருதப்பட்டாலும், அவை சில சமயங்களில் பெரியளவிலான பாதிப்புகளை உண்டாக்குகின்றன.
 
எனவே, முதல் முறையாக இயந்திர கற்றல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு பூகம்பத்தின் பிந்தைய நடுக்கம் எங்கு நடைபெறும் என்பதை கணிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகின்றனர். 
 
இயந்திர கற்றலையும், அதற்கு தொடர்புடைய தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவதன் மூலம் பூகம்பம் போன்ற சிக்கலான சவால்களை அறிந்துகொள்ள இயலும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்