இந்தோனேசியாவில் பயங்கர நிலநிடுக்கம்- ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு

Webdunia
திங்கள், 26 மார்ச் 2018 (11:38 IST)
இந்தோனேசியாவில் இன்று அதிகாலை 6.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
கிழக்கு இந்தோனேசியாவில் கடல் மட்டத்துக்கு கீழ் 171 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தல் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
அமெரிக்க புவியியல் மையம் இந்த நிலநடுக்கம் 6.4 ரிகடர் அளவு கோலில், இந்தோனேசியாவின் டனிம்பார் தீவில் உள்ள சாம்லகி கடல் பகுதியை ஒட்டியுள்ள வடமேற்கு திசையில் சுமார் 222 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
 
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. மேலும், இந்த நிலநடுக்கத்தால் அந்த கடலைச் சுற்றியுள்ள மற்ற நாடுகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்