உயிரை காப்பாற்ற வெளியே குதியுங்கள்; துபாய் விமானத்தின் கடைசி நிமிட வீடியோ

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (14:38 IST)
திருவனந்தபுரத்திலிருந்து துபாய் சென்ற எமிரேட்ஸ் ஏகே521 விமானம் நேற்று, துபாய் விமான நிலையத்தில் தரை இறங்கும் போது தீ பிடித்தது. அந்த விபத்தில் விமானிகள், பணிப்பெண்கள் மற்றும் பயணிகள் என 300 பேரும் அதிரிஷ்டவசமாக உயிர் தப்பினர்.


 

 
அந்த விமானத்தில் தீ பற்றியவுடன், அதில் இருக்கும் பயணிகள் வெளியேற முயற்சி செய்வதும், அதற்குள் “உங்களின் உயிரை காப்பாற்றிக் கொள்ள, பொருட்களை விட்டு விட்டு உடனடியாக வெளியே குதியுங்கள்” என்று பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டதும், அவர்கள் வேகவேகமாக அங்கிருந்து ஓடும் வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது.
 
விமானத்தில் பயணம் செய்த ஒருவர், இந்த நிகழ்வுகளை வீடியோ எடுத்து அதை வெளியிட்டுள்ளார். 
 
இதில் ஒரு முக்கிய செய்தி என்னவெனில், அனைத்து பயணிகளும், அவசரமாக விமானத்திலிருந்து கீழே இறங்குவதற்கும், விமானத்தி ஒரு பகுதி வெடித்து சிதறுவதற்கும் சரியாக இருந்தது என்று, அந்த விமானத்தில் பயணம் செய்த, கேரளாவை சேர்ந்த சாய் பாஸ்கர் என்பவர் கூறியுள்ளார்.
 
“நாங்கள் வெளியேறி ஒரு நிமிடத்திற்குள் விமானத்தின் ஒரு பகுதி வெடித்து சிதறியது. அதன் பின் ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது. நல்ல வேளையாக நாங்கள் உயிர் தப்பிவிட்டோம். எங்களுக்கு உதவ யாரும் வரவில்லை. நாங்களாகவே எங்கள் உயிரை காப்பாற்றிக் கொண்டேம்” என்று அவர் கூறினார்.
 
அடுத்த கட்டுரையில்