பூட்ஸில் போதைப் பொருள் கடத்தியவர் கைது!

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2023 (22:56 IST)
இங்கிலாந்து நாட்டில்  ஒரு கொள்ளையன் தன் பூட்ஸில் ரூ.20 கோடி போதைப் பொருள் மறைத்து வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து  நாட்டில்  ஒரு சாலை வழியே போதைப் பொருள் கடத்திச் செல்வதாக போலீஸாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, போலீஸார் சாலையில் சோதனை மேற்கொண்டிருந்தனர்.

அங்குள்ள பிரதான சாலையில் காரில் வந்த ஒருவர் போலீஸாரிடம் சென்று, தன்னிடம் போதைப் பொருட்கள் உள்ளதாகவும், தன் பூட்ஸில் கொகைன் என்ற போதைப் பொருட்கள் இருப்பதாகவும் கூறினான்.

இதையடுத்து, போலீஸார், அவர் காரில் சோதனை மேற்கொன்டனர். அதில், 2 பையில் போதைப் பொருட்களும், அவன் பூட்ஸில் மறைத்து வைத்திருந்த போதைப்பொருளையும் பறிமுதல் செய்தனர்.

இதன் மதிப்பு  ரூ.20 கோடி  எனக் கூறப்படுகிறது. அவனைக் கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவனுக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டை வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்