2024 தேர்தலில் போட்டியிடுவேன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் அதிரடி பேச்சு...!

Webdunia
வெள்ளி, 4 நவம்பர் 2022 (14:13 IST)
2024 ஆம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன் என முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்கள் வேட்டி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப் தோல்வியடைந்தார். அந்த தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார்
 
இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார் 
 
2020 ஆம் ஆண்டு தேர்தலில் நான் பத்து இலட்சம் வாக்குகள் அதிகம் பெற்றேன் என்றும் நமது நாட்டை பாதுகாப்புடன் வெற்றிகரமாகவும் நடத்த நான் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்