தென்கொரியா, ஜப்பான் மேல கை வெச்சா…? – வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

வெள்ளி, 4 நவம்பர் 2022 (08:44 IST)
கடந்த சில நாட்களாக வடகொரியா அண்டை நாடுகளை அச்சுறுத்தும் வகையில் ஏவுகணை சோதனை நடத்தி வரும் நிலையில், வடகொரியாவின் இந்த செயலை அமெரிக்கா கண்டித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக வடகொரியா மேற்கொண்டு வரும் ஏவுகணை சோதனைகள் அண்டை நாடுகளான தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தி வருவதோடு, உலக நாடுகளின் எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளது.

நேற்று முன்தினம் ஒரே நாளில் 23 ஏவுகணைகளை வடகொரியா ஏவி சோதனை செய்ததில் 3 ஏவுகணைகள் தென்கொரிய எல்லையில் கடல்பகுதியில் விழுந்தது. அதுபோல நேற்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா ஜப்பான் பகுதிக்கு மேலே ஏவியதாக கூறப்படுகிறது.

ALSO READ: 63.68 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!

இதனால் ஜப்பானின் மியாகி, யமகோட்டா, நிகாட்டா ஆகிய மாகாணங்களில் வசிப்பவர்கல் பாதுகாப்பான இடத்திற்கும், பாதாள சுரங்கத்திற்கும் சென்று பதுங்க ஜப்பான் பிரதமர் எச்சரிக்கை விடுத்தார். வடகொரியாவின் அச்சுறுத்தும் இந்த செயல்பாடுகளை புமியோ கிஷிடா கண்டனம் தெரிவித்துள்ளார்.

அண்டை நாடுகளான தென்கொரியா, ஜப்பானை அச்சுறுத்தும் விதத்தில் வடகொரியா செயல்படுவது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா “தென்கொரியாவுக்கும், ஜப்பானுக்கும் அமெரிக்கா இரும்புகவசமாக இருக்கிறது. வடகொரியாவின் ஏவுகணை சோதனை சர்வதேச அமைதிக்கு அச்சுறுத்தல் விளைவிப்பது தற்போது நிரூபணமாகியுள்ளது” என தெரிவித்துள்ளது.

Edited By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்