தரைவழி தாக்குதலை நடத்த வேண்டாம்- இஸ்ரேலுக்கு அமெரிக்கா வேண்டுகோள்

Webdunia
சனி, 14 அக்டோபர் 2023 (12:48 IST)
பாதுகாப்பு வழித்தடங்கள் ஏற்படுத்தும் வரையில் காசா மீது தரைவழி தாக்குதல் நடத்த வேண்டாம் என இஸ்ரேலுக்கு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக மோதல் நிகழ்ந்து வரும் நிலையில் சமீபத்தில் பாலஸ்தீன ஆதரவு அமைப்பு ஹமாஸ் நடத்திய தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கு பதிலடியாக ஹமாஸ் ஆக்கிரமிப்பு பகுதியான காசா முனை மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ளது.

இருதரப்பினர் இடையே தாக்குதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், போர் தீவிரமடைந்துள்ளதால்தனால் பலர் உயிரிழந்துள்ளனர். மக்கள், உணவு, இருப்பிடம், நீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்தப் போர்  சர்வதேச நாடுகளிலும் பாதிக்கப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலக நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன. 

இந்த நிலையில்,  பாதுகாப்பு வழித்தடங்கள் ஏற்படுத்தும் வரையில் காசா மீது தரைவழி தாக்குதல் நடத்த வேண்டாம் என இஸ்ரேலுக்கு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும், வான்வழி தாக்குதலை தொடர்ந்து காசா  மீது இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்த போவதாக தகவல் தெரிவித்துள்ளது.

24 மணி நேரத்தில்  தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் கூறிய நிலையில், இந்தக் காலக்கெடு நிறைவடைவதால், இஸ்ரேல் தாக்குதல் நடத்துமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்