மீளாத பொருளாதாரம்; டிஸ்னி எடுத்த அதிர்ச்சி முடிவு! – 28 ஆயிரம் ஊழியர்கள் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (08:14 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்துள்ள நிலையில் அமெரிக்காவின் மிகப்பெரும் கேளிக்கை பூங்காவான டிஸ்னி எடுத்துள்ள முடிவு பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகள் பலவற்றில் ஊரடங்கு அமலில் உள்ளதால் பல்வேறு கேளிக்கை பூங்காக்கள், சினிமா தியேட்டர்கள் ஆகிய பலவும் மூடப்பட்டுள்ளன. இதனால் அந்நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் மிகப்பெரும் கேளிக்கை பூங்காக்களை நடத்தி வரும் வால்ட் டிஸ்னி நிறுவனம் சமீபத்தில் தனது பணியாளர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

வால்ட் டிஸ்னி கேளிக்கை பொழுதுபோக்கு பூங்கா பிரிவு தலைவரான ஜாஷ் டி அமோரா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கனத்த இதயத்துடன் தொழிலாளர்கள் பணி நீக்க அறிவிப்பை வெளியிடுவதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் 28 ஆயிரம் பணியாளர்கள் தங்கள் பணிகளை இழக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்