தடுப்பூசி போடாவிட்டால் பணி நீக்கம் -கூகுள் நிறுவனம் எச்சரிக்கை

Webdunia
புதன், 15 டிசம்பர் 2021 (17:29 IST)
தடுப்பூசி போட்டுக் கொள்ளாவிட்டால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என கூகுள் நிறுவனம் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஆண்டு  சீனாவில் இருந்து உலகம் எங்கும் பரவத் தொடங்கிய கொரொனா வைரஸின் இரண்டாம் அலை தற்போது பரவி வருகிறது. விரையில் 3 வது அலை பரவ உள்ளதாகக்கூறப்படும் நிலையில், தற்போது தென்னாப்பிரிக்காவில் இருந்துன் கொரொனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வேகமாகப் பரவி வருகிறது.

இந்நிலையில்,  கொரொனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த  நாடு முழுவதும் மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்நிலையில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாவிட்டால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என கூகுள் நிறுவனம் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளதாவது: தடுப்பூசி போட்டுக்கொள்ளத தங்கள் ஊழியர்கள் இறுதி நடவடிக்கையாக பணி நீக்கத்திற்கு ஆளாக நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்