தடுப்பூசி போடாவிட்டால் பணி நீக்கம் - அதிரடி காட்டும் கூகுள்!

புதன், 15 டிசம்பர் 2021 (11:43 IST)
ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தாவிட்டால் பணிநீக்கம் என கூகுள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 
கூகுள் நிறுவனம் கொரோனா பாதிப்பின் போது தனது ஊழியர்களுக்கு வீட்டில் ருந்து வேலை செய்யும் படி அறிவுறுத்தியது. இந்நிலையில் சமீபத்தில் கூகுள் நிறுவனம் எதிர்வரும் ஜனவரி 10 முதல் உலகம் முழுவதும் இயங்கி வரும் தனது அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கட்டாயம் அலுவலகம் வர வேண்டும் என சொல்லி இருந்தது. 
 
இதனைத்தொடர்ந்து ஒமிக்ரான் வைரஸ் பரவல் துவங்கி இருப்பதால் ஊழியர்கள் அலுவலகம் வர வேண்டும் என்ற திட்டத்தை காலவரையின்றி ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தாவிட்டால் பணிநீக்கம் என கூகுள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஆம், கொரோனா தடுப்பூசி செலுத்தாத ஊழியர்கள் ஜனவரி 18 ஆம் தேதி முதல் 30 நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பில் அனுப்பப்படுவார்கள் என்றும் அதன் பின்னர் சம்பளம் இல்லாத விடுப்பில் ஆறு மாதங்களுக்கு வைக்கப்பட்டு பின்னர் பணி நீக்கம் செய்ய கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளன. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்