ஜோம்பி என்ற நோய் தாக்குதலால் மான்கள் உயிரிழப்பு...

வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (18:31 IST)
கனடா நாட்டில்  ஜோம்பி என்ற  நோய் தாக்குதலால் மான்கள் மூளை செயலிழந்து உயிரிழந்து வருகின்றன.

கனடாவில் தற்போது, மான்களை தாக்கும்  தொற்று நோயான  ஜோம்பி தற்போது பரவி வருகிறது.

இதுகுறித்து அமெரிக்க  நோய்க்கட்டுப்பாடு மையத்தின்படி  எல்க்,  கலைமான், சிகா மான் ஆகியவற்றை இது அதிகளவில் தாக்குவதாக தெரிவித்துள்ளது.  ஜோம்பி   நோயால் பாதிக்கப்பட்ட மானின் இறைச்சியை சாப்பிடுபவர்களுக்கு இந்த நோய் ஏற்படும் . ஆபத்து வாய்ந்ததாக கருதப்படும் இந்த நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

உலக சுகாதார அமைப்பு இதுகுறித்து கூறியுள்ளதாவது: மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும், மான் இறைச்சியை தவிர்க்க வேண்டும்,                                        விலங்குகளுக்கு ஆடை அணிவிக்கும்போது, ரப்பர் கையுறைகளை அணிந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.                                  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்