17 பெண் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: கைதுக்கு பயந்து சாமியார் சைதன்யானந்தா தலைமறைவு..!

Mahendran

சனி, 27 செப்டம்பர் 2025 (12:10 IST)
டெல்லியில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில், அதன் நிர்வாக குழு உறுப்பினர் சுவாமி சைதன்யானந்தா சரஸ்வதி என்பவர், 17 பெண் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 
 
புகாரின்படி, மாணவிகளின் விடுதி அறைகள், கழிப்பறைகள் உட்பட அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு என்ற பெயரில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதன் நேரலை பதிவுகளை சைதன்யானந்தா தனது தொலைபேசியில் பார்த்துள்ளார். 
 
“ஐ லவ் யூ பேபி” போன்ற அநாகரிகமான குறுஞ்செய்திகளை இரவு நேரங்களில் அனுப்பியதாகவும், உறவு குறித்த தனிப்பட்ட கேள்விகளைக் கேட்டு மாணவிகளை துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவரது அலுவலகத்தில் ஒரு மாணவி வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டு, அவரது உடைகள் கிழிக்கப்பட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
பாதிக்கப்பட்ட மாணவிகளால் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சைதன்யானந்தா தலைமறைவாகியுள்ளார். அவரைத் தேடும் பணியில் டெல்லி காவல்துறை தீவிரமாக உள்ளது.  
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்