30.35 கோடியை தாண்டி செல்லும் கொரோனா பாதிப்பு - உலக நிலவரம்!

Webdunia
சனி, 8 ஜனவரி 2022 (08:19 IST)
உலகம் முழுவதும் ஒரே நாளில் 2,605,304 பேர் புதிய தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 30.35 கோடியை தாண்டியுள்ளது. 
 
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.
 
இந்நிலையில் உலகம் முழுவதும் ஒரே நாளில் 2,605,304 பேர் புதிய தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உலகம் முழுவதும் கொரோனாவால் 30,35,33,401 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 25,82,02,638 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54.96 லட்சத்தை தாண்டியது.
 
மேலும் 93,038 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னர் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்