ஒமைக்ரானை அலட்சியமாக்க வேண்டாம் - WHO

வெள்ளி, 7 ஜனவரி 2022 (18:33 IST)
ஒமைக்ரானை அலட்சியமாக கருதிவிட முடியாது என உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் பேட்டி. 

 
தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவியுள்ள ஒமிக்ரான் வேரியண்ட் உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் ஒமிக்ரான் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
 
இந்நிலையில் உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், தடுப்பூசி செலுத்தியவர்களை பொறுத்தவரை டெல்டாவுடன் ஒப்பிடும் போது ஒமைக்ரானின் தீவிரத்தன்மை குறைவு என எடுத்துக்கொண்டாலும், அதற்காக ஒமைக்ரானை அலட்சியமாக கருதிவிட முடியாது.
 
டெல்டாவை ஒப்பிடும்போது ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவின் முந்தைய மாறுபாடுகளைப்போலவே, ஒமைக்ரானால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. அதனால் ஒமைக்ரான் வைரஸை அலட்சியமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்