அதிபர் பதவியேற்பு விழாவில் குண்டு வெடிப்பு..

Arun Prasath

திங்கள், 9 மார்ச் 2020 (18:43 IST)
ஆஃப்கானிஸ்தானில் அஷ்ரஃப் கானி அதிபராக பதவியேற்கும் விழாவின் போது குண்டு வெடிப்பு நடந்துள்ளது.

ஆஃப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் அதிபராக இருந்த அஷ்ரஃப் கானி, போட்டியிட்டார். அவரை எதிர்த்து அந்நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா அப்துல்லா போட்டியிட்டார்.

இதனை தொடர்ந்து கடந்து டிசம்பர் மாதம் நடந்த வாக்கு எண்ணிக்கையில் அஷ்ரஃப் கானி வெற்றி பெற்றார். ஆனால் இத்தேர்தலில் முறைகேடு நடந்ததாக தேர்தல் ஆணையத்திடம் அப்துல்லா அப்துல்லா சார்பில் கோரிக்கை எழுந்தது. எனினும் மீண்டும் நடத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கையில் அஷ்ரஃப் கானியே வெற்றி பெற்றார்.

இந்நிலையில் இன்று அஷ்ரஃப் கானி, காபுலில் அதிபராக பதவியேற்றார். அப்போது காபுலில் சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடித்தது. இதில் அவ்விழாவில் கலந்துக்கொண்டவர்கள் குண்டு வெடித்த சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அஷ்ரஃப் கானி, அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து தனது பதவியேற்பு உரையை நிகழ்த்திக் கொண்டிருந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்