கேஜிஎஃப் கதை போல கடலில் மூழ்கிய தங்க கப்பல்! – உரிமை கொண்டாடும் நாடுகள்!

Webdunia
சனி, 11 ஜூன் 2022 (11:53 IST)
கேஜிஎஃப் படத்தில் வருவதுபோல தங்கத்துடன் கடலில் மூழ்கிய கப்பல் ஒன்றுக்காக மூன்று நாடுகள் சண்டை போட்டு வரும் சம்பவம் வைரலாகியுள்ளது.

சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் படத்தில் ஹீரோ ராக்கி பாய் தங்கம் அனைத்தையும் கப்பலில் ஏற்றிக் கொண்டு கடலில் சென்று கப்பலோடு மூழ்கிவிடுவார். அதுபோன்ற சம்பவம் ஒன்று வரலாற்றில் நடந்துள்ளது.

1700களில் கடலில் யார் ஆதிக்கம் செலுத்துவது என ஐரோப்பிய நாடுகள் இடையே கடும் மோதல் இருந்து வந்தது. மத்திய கிழக்கு, ஆசிய கடல் பகுதிகளில் பிரிட்டிஷ் ஆதிக்கம் செலுத்தியது போல, தென் அமெரிக்கா மற்றும் ஆர்டிக், அட்லாண்டிக் கடல் பகுதிகளில் ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தி வந்தது.

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவிலிருந்து ஏராளமான தங்கம், வெள்ளி, மரகத கற்களை சுமந்து கொண்டு புறப்பட்ட ஸ்பெயின் கடற்படை கப்பலான சான் ஜோஸ் 1706ம் ஆண்டு கொலம்பியா கடல் பகுதியில் பிரிட்டிஷ் கப்பலுடன் போரிட்டது. இதில் தீப்பற்றிய சான் ஜோஸ் கப்பல் கடலில் மூழ்கி மாயமானது.

300 வருடங்களுக்கு முன்பு மாயமான கப்பலின் எச்சத்தை கடந்த 2015ம் ஆண்டில் கண்டுபிடித்துள்ளனர். அதை கொண்டு அமெரிக்காவின் எம்.ஏ.சி என்ற நிறுவனம் அக்கடல் பகுதியில் நடத்திய ஆய்வில் கடலில் 3,100 அடி ஆழத்தில் கப்பல் இருப்பது தெரிய வந்துள்ளது. அதில் உள்ள தங்கம் உள்ள பொக்கிஷங்களின் மதிப்பு தற்போதைய நிலவரப்படி 1.32 லட்சம் கோடி ரூபாய் என தெரிகிறது.

இந்நிலையில் இந்த புதையல் தங்களுக்குதான் சொந்தம் என அமெரிக்காவின் எம்.ஏ.சி நிறுவனம், ஸ்பெயின் மற்றும் கொலம்பியா நாடுகள் குடுமிபிடி சண்டையில் இறங்கியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்