இஸ்ரேல் பாதுகாப்பு படைவீரர்களுடன் மோதல்....3 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

Webdunia
திங்கள், 22 மே 2023 (14:31 IST)
இஸ்ரேல் நாட்டிற்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையில் பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது.

தற்போது பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் என்ற அமைப்பு ஆட்சி  செய்து வருகிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் நாடு பயங்கரவாத அமைப்பாக கருதும் நிலையில், இதேபோன்று பல ஆயுதமேந்திய அமைப்புகள் காசா முனை மற்றும் மேற்குகரையில் இயங்கி வருகின்றன.

பாலஸ்தீனத்திற்கு மேற்குகரையில் முகமது அப்பாஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இப்பகுதியின் சில பகுதிகள்  இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இதனால், இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீன ஆயுதமேந்திய குழுக்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் எழுந்து வருகிறது.

இந்த நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் இன்று, மேற்குகரையின் நப்லஸ் நகரில் உள்ள பலாடா அகதிகள் முகாமி திடீர் சோதனை நடத்தினர். இதில், இஸ்ரேல் படையினருக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையில் மோதல்  உருவாகி துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

இந்த தாக்குதலில் 3 பாலஸ்தீனியர்கள் பலியானதாகவும், 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால், இரு நாடுகள் இடையே பதற்றம் சூழ்ந்துள்ளது.

சமீபத்தில், இஸ்ரேல் படையினர்   காரணமின்றி தன்னை கைது செய்ததாக கூறி காதர் அட்னன்  என்பவர் 87 நாட்கள் வரை உண்ணாவிரத போராட்டம் இருந்த நிலையில் அவர் உயிரிழந்தார். இதையடுத்து, இஸ்ரேல் மீது பாலஸ்தீன படை தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு இஸ்ரேல் படையினரும் வான்வெளி தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்