இந்தியாவுக்கு அதிக இழப்பை ஏற்படுத்தி கசப்பான அனுபவத்தை கொடுப்போம்: கொக்கரிக்கும் சீனா!

Webdunia
புதன், 5 ஜூலை 2017 (16:17 IST)
இந்தியா சீனா எல்லைப்பகுதியான சிக்கிம் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இரு நாடும் மாறி மாறி ஒருவரை ஒருவர் மிரட்டும் விதமாக பேசுவதால் போர் மூழும் சூழல் உருவாகுமோ என சிக்கிம் பகுதி பதற்றத்துடன் உள்ளது.


 
 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்தியா சீனா இடையே உள்ள டோக்லாம் என்ற வரையறுக்கப்படாத பகுதியில் சாலை அமைக்கும் பணியில் சீனா ராணுவத்தினர் ஈடுபட்டு வந்தனர். இதனை தடுத்து நிறுத்திய இந்தியா கடந்த 1962-இல் இருந்த இந்தியா வேறு தற்போது உள்ள இந்தியா வேறு என சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்தது.
 
இதனால் எல்லைப்பகுதியில் பதற்றம் நிலவியது. இந்நிலையில் சாலைப்பணியை தடுக்க இந்திய ராணுவத்தினர் எல்லைப்பகுதியை தாண்டி வந்ததும், சிக்கிம் எல்லையில் இந்திய வீரர்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதும் ஏற்றுக்கொள்ள முடியாதது என சீன பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
 
மேலும், எல்லைப்பகுதியில் சீனா போர் தொடுத்தால் கடந்த 1962-இல் ஏற்பட்ட இழப்பை விட இந்தியா அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் எனவும் இந்தியாவுக்கு கசப்பான அனுபவத்தை கற்றுக்கொடுப்போம் எனவும் சீன பத்திரிக்கைகள் கொக்கரிக்கின்றன. இதனால் எல்லைப்பகுதியில் பதற்றம் உருவாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்