சீனாவின் முன்னணி ஏஐ நிறுவனமான Deepseek அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது என்றும் சாட் ஜிபிடி, ஜெமினி ஆகியவற்றின் செயல்திறனை விட இது மிகவும் சிறப்பாக உள்ளது என்றும் மேலும் மலிவு விலையில் இந்த சேவை கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிறுவனம் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக அமெரிக்க பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரே நாளில் முதலீட்டாளர்கள் பல லட்சம் கோடி நஷ்டம் அடைந்திருப்பதாகவும் குறிப்பாக ஏஐ நிறுவனங்களின் பங்குகள் 15 முதல் 20 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அமெரிக்க பங்குச் சந்தையில் ஒரு ட்ரில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.