கரையை நோக்கி வரும் மோன்தா புயல்! வேகம் குறைந்தது! - கரையை கடப்பது எப்போது?

Prasanth K

செவ்வாய், 28 அக்டோபர் 2025 (12:25 IST)

வங்கக்கடலில் உருவான மோன்தா புயல் இன்று கரையை கடக்கும் நிலையில் நகரும் வேகம் குறைந்துள்ளது.

 

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, மோன்தா புயலாக வலுவடைந்த நிலையில் இன்று தீவிர புயலாக மாறி ஆந்திராவில் கரையை கடக்கிறது. இதனால் ஆந்திரா மற்றும் வட தமிழக மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் காலையில் இருந்து மணிக்கு 15 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் நகர்ந்து வந்த புயல் தற்போது வேகம் குறைந்து மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

விசாகப்பட்டிணத்தில் இருந்து 320 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள புயல், மாலையிலிருந்து இரவுக்குள் கரையை கடக்கும் என்றும், கரையை கடக்கும்போது 90 முதல் 110 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்