
தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அரசு பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு புதிய அறிவுறுத்தல்களை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் பேருந்துகள் இயக்குவது குறித்து ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு தமிழக போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களில் கூறப்பட்டுள்ளதாவது.
தகுந்த வழிகாட்டுதல் முறைகளை கடைபிடித்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பணிமனைகளில் நீர் தேங்காமல் இருக்கும் வகையில் வடிகால் வசதிகள் சரியாக இருக்கின்றனவா என்பதை சரிபார்க்க வேண்டும்
பேருந்துகளுக்குள் நீர் ஒழுகுதல் உள்ளிட்ட புகார்கள் இருந்தால் கிளை மேலாளர்களிடம் தெரியப்படுத்த வேண்டும். பேருந்தை இயக்கும்போது சாலைகளில் மரங்கள், மின்கம்பங்கள் விழுந்துள்ளனவா என்பதை கவனித்து பேருந்தை ஓட்ட வேண்டும். டீசல் நிரப்ப செல்லும்போது பங்கில் சேமிப்பு கிடங்கில் நீர் கலக்கமால் இருக்கிறதா என்பதை உறுதி செய்துக் கொண்டு டீசலை நிரப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K