இரண்டாவது முறையாக அமெரிக்கா அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் அவர்களிடம் பிரதமர் மோடி பேசியதாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவு செய்துள்ளார். நம்பகமான கூட்டான்மைக்கு நாங்கள் உறுதி கொண்டு உள்ளோம்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபராக கடந்த சில நாட்களுக்கு முன் டொனால்ட் டிரம்ப் மீண்டும் பதவி ஏற்ற நிலையில், இந்த பதவி ஏற்பு விழாவில் இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார் என்பது தெரிந்தது.
இந்த நிலையில், அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் அவர்களிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். இருதரப்பு உறவு குறித்து பேசியதாகவும், உலக அமைதிக்காக இணைந்து பணியாற்ற இரு தரப்பும் ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பரஸ்பர நன்மை பயக்கும் நம்பகமான கூட்டணிக்காக நாங்கள் உறுதி கொண்டு உள்ளோம். நமது மக்களின் நலன், உலகளாவிய அமைதி, செழிப்பு, பாதுகாப்பு ஆகியவற்றிற்காக நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவோம்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.