ஆங்.. போங்க.. போங்க.. வறுமையை ஒழிச்சாச்சு! – வறுமையில்லாத நாடாக சீனாவை அறிவித்த ஜின்பிங்!

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (11:40 IST)
சீனாவில் நாடு முழுவதும் மொத்தமாக வறுமை ஒழிக்கப்பட்டுவிட்டதாக அதிபர் ஜீ ஜின்பிங் அறிவித்துள்ளார்.

உலகில் மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் இருந்து வரும் நிலையில் வறுமை, ஏழ்மையின் எண்ணிக்கையும் அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் மூன்றாம் உலக நாடான சீனாவின் வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு குறித்து கணக்கிட்ட ஐ.நா சபை 2030க்குள் சீனாவில் வறுமை முழுமையாக ஒழியும் என குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது சீனாவில் ஏழ்மை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக சீன அதிபர் ஜீ ஜின்பிங் அறிவித்துள்ளார். ஐநா சபை 2030 வரை காலம் நிர்ணயித்திருந்த நிலையில் சீனாவின் பொருளாதார வளர்ச்சியால் முன்கூட்டியே ஏழ்மை ஒழிக்கப்பட்டுவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்