பதவியேற்று ஜோ பிடன் நடத்திய முதல் தாக்குதல்! – சிரியாவில் அமெரிக்கா குண்டு மழை!

வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (10:43 IST)
சிரியாவில் உள்ள ஈரான் ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக பெண்டகன் தெரிவித்துள்ளது.

ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே தாக்குதல் சம்பவங்கள் சில ஆண்டுகளாகவே தொடர்ந்து வரும் நிலையில், கடந்த 15ம் தேதி ஈரான் விமானங்கள் அமெரிக்க படைதளங்கள் மீது தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அமெரிக்க வீரர்கள் பலர் காயமடைந்தனர்.

இந்நிலையில் தற்போது சிரியாவில் உள்ள ஈரான் ராணுவ தளங்கள் மீது அமெரிக்க விமானப்படைகள் வான்வழி தாக்குதலை மேற்கொண்டன. இதனால் ஈரான் விமான தளங்கள் சேதமடைந்துள்ள நிலையில் ஜோ பிடன் உத்தரவின் பேரில் இதை செய்து முடித்துள்ளதாக பெண்டகனில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்