சீனாவில் 168 மில்லியன் செலவில் செயற்கை மழை

Webdunia
ஞாயிறு, 29 ஜனவரி 2017 (17:33 IST)
சீனாவில் வரட்சியை போக்க அந்நாட்டு அரசு செயற்கை மழை பொழிய வைத்தப்பதற்கு திட்டமிட்டு வருகிறது.


 

 
சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள மாகாணங்கள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் உள்ள ஆறுகள், குளங்கள் எல்லாம் வறண்டு போய்விட்டது. குடிநீருக்கும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.
 
இந்நிலையில் அந்நாட்டு அரசு செயற்கை மழை பொழிய செய்து வறட்சியை போக்க முடிவு செய்துள்ளது. அண்மையில் இதற்கான சோதனை நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது. சுமார் 3,70,658 சதுர மைல் பரப்பளவில் 168 மில்லியன் செலவில் இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
இது சீனாவின் மொத்த நிலப்பரப்பில் 10 % மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் முழுவதும் நிறைவடைய மூன்று ஆண்டுகள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்