ஆயிரத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை: சீனாவை அழிக்கும் கொரோனா!

Webdunia
திங்கள், 10 பிப்ரவரி 2020 (08:46 IST)
கடந்த மாதத்தில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸால் பலி எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கி விட்ட நிலையில் சீன தேசம ஸ்தம்பித்துள்ளது.

கடந்த மாதம் சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. வைரஸ் பரவும் பகுதியான வூகான் மாகாணம் மூடப்பட்ட நிலையிலும் வைரஸின் தாக்கம் குறையவில்லை. இதை உலக சுகாதார அமைப்பு மருத்துவ அவசர நிலையாக பிரகடனப்படுத்தியுள்ள நிலையில் பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்களும் இதற்கான மருந்து கண்டுபிடிப்பதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் இதுவரை கொரோனா வைரஸால் 902 பேர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை அல்லது நாளை மறுநாள் இந்த எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி விடும் என கூறப்படுகிறது. சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை அனுமதிக்க மருத்துவமனை வசதி போதாமையால் பலருக்கு வீடுகளிலேயே மருத்து சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்