கால்வாய்களில் குப்பைகளை கொட்டினால் கடும் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

Webdunia
புதன், 9 நவம்பர் 2022 (19:56 IST)
கால்வாய்களில் குப்பைகளை கொட்டினால் கடும் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
சென்னையில் உள்ள கால்வாய்களில் குப்பைகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
சென்னையில் உள்ள கால்வாய்களில் குப்பைகளை கொட்டுவதால் தண்ணீர் ஓடாமல் தேங்கி இருக்கிறது என்பதும் இதனால் பல நோய்களுக்கு வித்திடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சென்னையில் உள்ள கால்வாய்களில் குப்பைகளையும் கட்டிட கழிவுகளையும் கொட்டுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது
 
 கால்வாயில் குப்பைகளை கொட்டுவதால் தான் மழை நீர் தேங்கி ஊருக்குள் புகுந்து விடுகிறது என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்