கனடா கல்லூரிகளில் பெரும் பணிநீக்கம்: இந்திய மாணவர் சேர்க்கை சரிவால் 10,000 பணியாளர்கள் பாதிப்பு!

Mahendran

வெள்ளி, 11 ஜூலை 2025 (17:01 IST)
கனடா கல்லூரிகள், குறிப்பாக ஒன்டாரியோவில், சர்வதேச மாணவர் சேர்க்கை, முக்கியமாக இந்திய மாணவர் சேர்க்கை, திடீரென குறைந்ததன் விளைவாக பெரும் பணிநீக்கத்தை சந்தித்து வருகின்றன. கிட்டத்தட்ட 10,000 பேராசிரியர்கள், நிர்வாக மற்றும் துணை பணியாளர்கள் வேலை இழந்துள்ளனர். கனடா அரசு வெளிநாட்டு மாணவர்களுக்கு விதித்த படிப்பு அனுமதி வரம்பு நிபந்தனைகளால் ஏராளமான இந்திய மாணவர்கள் வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது.
 
ஒன்டாரியோவில் உள்ள 24 கல்லூரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இங்கு முன்பு சர்வதேச மாணவர் எண்ணிக்கையில் பாதிக்கும் மேல் இந்திய மாணவர்களே இருந்தனர் என்றும், ஆனால் கனடா அரசு எடுத்த சில நடவடிக்கைகளால் தற்போது மாணவர் எண்ணிக்கை வெகுவாக தொடங்கிவிட்டன என்று தகவல் வெளியாகியுள்ளது..
 
சுமார் 10,000 தொழிலாளர்களின் பணிநீக்கம் கனடாவின் கல்வித் துறையில் அண்மைய ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய வேலைவாய்ப்பு சரிவுகளில் ஒன்றாகும். நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க அரசாங்கத்தின் உடனடி நடவடிக்கை இல்லாவிட்டால், கனடாவின் உயர்கல்வி நிறுவனங்கள் மேலும் ஸ்திரமின்மையை எதிர்கொள்ளலாம். 

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்