பீகார் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 6 மற்றும் 11 தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில், எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் அடங்கிய இந்தியா கூட்டணி இன்று  தங்கள் பிரதான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டது.
	 
	RJD தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் காங்கிரஸ் தலைவர் பவன் கெரா ஆகியோர் முன்னிலையில் இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க. கூட்டணிக்கு கடும் போட்டியளிக்கும் நோக்கில், வாக்காளர்களை கவரும் வகையில் பல முக்கிய வாக்குறுதிகளை 'இந்தியா' கூட்டணி வழங்கியுள்ளது.