அமெரிக்க அதிபர் ட்ரம்ப், நாசாவில் பணிபுரியும் சுமார் 2,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செலவுகளை குறைக்க பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில், தற்போது அடுத்த கட்டமாக, நாசாவில் உயர் பொறுப்பில் இருக்கும் 2,000க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்க அரசாங்க வட்டாரங்களில் இருந்து வெளியான தகவலின்படி, 2,145 பேரை பணிநீக்கம் செய்யப் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக, நிலாவுக்கு மனிதர்களை அனுப்ப நாசா 2026 ஆம் ஆண்டு திட்டமிட்டுள்ள நிலையில், இந்த பணிநீக்கத்தால் அந்த பணிகள் பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக இந்திய மதிப்பில் ₹5 லட்சம் கோடி செலவு குறையும் என்று கூறப்பட்டு வருகிறது.