இந்த இலைக்குவியலில் பாம்பு இருப்பதை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (22:47 IST)
நாயை கண்டால் கல்லை காணோம், கல்லை கண்டால் நாயை காணோம் என்று ஒரு பழமொழி உண்டு. உண்மையில் இது நாயை எறிய கல் தேடியதாக அர்த்தம் இல்லை. ஒரு சிற்பி நாய் சிலை ஒன்றை தத்ரூபமாக செதுக்கினார். அதை பார்த்த பார்வையாளர்கள் உண்மையான நாய் என்றே நினைத்தனர். ஆனால் தொட்டு பார்த்த பின்னர்தான் அது சிலை என்று தெரிந்தது. எனவே நாய் என்று நினைத்து பார்த்தபோது, சிலை (கல்) தெரியவில்லை, சிலை என்று நினைத்து பார்க்கும்போது நாய் தெரியவில்லை என்பதுதான் இதன் பொருள்



 


இந்த பழமொழியை போல அமெரிக்காவை சேர்ந்த ஹெலன் என்ற மாணவர் இலைக்குவியல் புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டரில் பதிவு செய்தார். அதில் ஒரு பாம்பு உள்ளது என்றும் அதை கண்டுபிடியுங்கள் என்றும் தனது நண்பர்களுக்கு சவால்விட்டார். எவ்வளவு முயன்றும் அவரது நண்பர்களால் அந்த புகைப்படத்தில் உள்ள பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை

பின்னர் அனைவரின் வேண்டுகோளுக்கு இணங்க பாம்பு இருக்கும் இடத்தை வட்டமிட்டு காட்டினார். இப்போது மேலே கூறிய பழமொழியை படித்து பாருங்கள், பொருத்தமாக இருக்கும். இதோ இந்த புகைப்படத்தில் உங்களால் அந்த பாம்பை கண்டுபிடிக்க முடிகின்றதா? என்று முயற்சித்து பாருங்கள். முடியவில்லை என்றால் இதோ இந்த லிங்க்கை கிளிக் செய்யுங்கள்

https://twitter.com/SssnakeySci/status/856149745827491840
அடுத்த கட்டுரையில்