கரூர் மாவட்ட ஓபன் கேரம் போட்டி...பரிசுகள் வென்ற வீரர்கள்
புதன், 21 செப்டம்பர் 2022 (23:01 IST)
JCI கரூர் டைமண்ட் ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் கரூர் மாவட்ட கேரம் சங்கம் இணைந்து நடத்தும் முதலாம் ஆண்டு கரூர் மாவட்ட ஓபன் கேரம் போட்டி VNC மஹாலில் செப்டம்பர் 18 ஆம் தேதி அன்று நடைபெற்றது.
இதில் ஆண்கள், பெண்கள் என இரு பிரிவில் ஒற்றையர் மற்றும் இரட்டையர்களுக்கான போட்டிகள் நடைபெற்றது மொத்தம் 200க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்குபெற்றனர்.
காலையில் நடந்த துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கரூர் CII சேர்மன் திரு வெங்கடேசன் மற்றும் மாநில கேரம் துணைத் தலைவர் Dr. C. Ramasubramanian தலைமையேற்று போட்டியினை துவக்கி வைத்தனர்
மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில் கரூர் மாவட்ட கேரம் சங்கத் தலைவர் ஸ்.மோகனரங்கன் மற்றும் திரு. கோபாலகிருஷ்ணன் DIPE-Karur அவர்கள் நினைவு பரிசு மற்றும் ரொக்கப்பரிசினை வழங்கினார்கள்.
இவர்களுடன் கரூர் மாவட்ட கேரம் சங்கச் செயலாளர் M. சுரேஷ், M.முஹம்மது கமால்தின் , JCI Karur Diamondடின் தலைவர் V. வெங்கடேஷ் வள்ளியப்பன், நிகழ்வின் தலைவர் R. Jeevananthan மற்றும் அவர்களது குழுவினர் நிகழ்வினை முன்னின்று நடத்தினார்கள்.
ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவிற்கு முதல் நான்கு பரிசு
3000 மற்றும் கோப்பை
2000 மற்றும் கோப்பை
1000 மற்றும் கோப்பை
500 மற்றும் கோப்பை
ஆண்கள் மற்றும் பெண்கள் இரட்டையர் பிரிவிர்க்கு முதல் நான்கு பரிசு