ஆல்ப்ஸ் பனிமலையில் கேபிள் கார்கள் பழுது: பயணிகள் இரவு முழுவதும் சிக்கித்தவிப்பு

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (15:43 IST)
பிரான்சில் உள்ள ஆல்ப்ஸ் பனிமலையில் கேபிள் கார்கள் பழுதடைந்ததால் இரவு முழுவதும் பயணிகள் அதில் சிக்கி தவித்தனர்.


 
 
ஐரோப்பாவில் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து நாடுகளில் ஆல்ப்ஸ் பனிமலை உள்ளது. இதை காண உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
 
இந்த நிலையில், பிரான்சில் உள்ள மான்ட் பிளாங்க் ஆல்பஸ் பனிமலை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் சென்று இருந்தனர். சுமார் 12,468 அடி உயரத்தில் செல்லும் கேபிள் காரில் அமர்ந்த படி பனிமலையின் அழகை பார்த்து ரசித்தனர்.
 
அப்போது திடீரென கேபிள் கார்கள் பழுதடைந்தன. இதனால் அவற்றின் செயல்பாடு நின்று விட்டது. எனவே, அவற்றில் இருந்து 110 பேர் சிக்கி தவித்தனர்.
 
தகவல் அறிந்ததும் இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்தை சேர்ந்த மீட்பு குழுவினர் 3 ஹெலிகாப்டர்களில் பறந்து கேபிள் கார்களில் சிக்கி தவித்த 65 பேரை பத்திரமாக மீட்டனர்.
 
இதற்கிடையே பனி அதிக அளவில் கொட்டத் தொடங்கியதால் மீட்பு பணி நிறுத்தப்பட்டது. இதனால் மீதமுள்ள 45 பேர் இரவு முழுவதும் கேபிள் கார்களிலேயே விடப்பட்டனர். பின்னர் காலை பொழுது மீட்கப்பட்டனர்.
அடுத்த கட்டுரையில்