உலகின் மிகவும் சக்தி வாய்ந்த நபர் மோடி – ட்ரம்ப், புடினெல்லாம் இவருக்கு அப்புறம்தான்

Webdunia
வெள்ளி, 21 ஜூன் 2019 (20:58 IST)
பிரிட்டனில் வெளியாகும் பிரிட்டிஷ் ஹெரால்ட் என்ற பத்திரிக்கை நடத்திய கருத்து கணிப்பில் உலகில் மிகவும் சக்தி வாய்ந்த நபர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார்.

பிரிட்டன் ஹெரால்ட் பத்திரிக்கை உலகில் மிக சக்தி வாய்ந்த மனிதர்கள் என்ற தலைப்பில் வாசகர்களிடம் கருத்து கணிப்பை நடத்தியது. அதில் தேர்வு செய்யப்பட்ட முக்கியமான 25 தலைவர்களில் நரேந்திர மோடியும் ஒருவர். அந்த 25 பேரில் யார் மிக சக்தி வாய்ந்தவர் என்ற வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் மோடி முதலாவதாக இடம் பெற்றுள்ளார். ரஷ்ய அதிபர் விளடிமிர் புதின் இரண்டாம் இடத்தையும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

மோடி முதல் சக்தி வாய்ந்த நபராக தேர்வு செய்யப்பட்டதையடுத்து அடுத்த பிரிட்டிஷ் ஹெரால்ட் இதழின் அட்டைப்படத்தில் அவரது புகைப்படம் இடம்பெறும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்