பிரிட்டன் தூதரை கைது செய்த ஈரான்: உலக நாடுகள் கண்டனம்!

Webdunia
ஞாயிறு, 12 ஜனவரி 2020 (08:00 IST)
ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது சமீபத்தில் ஏவுகணை தாக்குதல் நடத்திய ஈரான், உக்ரை நாட்டு பயணிகள் விமானத்தையும் தவறுதலாக சுட்டு வீழ்த்தியதால் அதில் பயணம் செய்த 180 பயணிகள் பரிதாபமாக பலியாகினர். எனவே ஈரான் மீது அமெரிக்கா உள்பட உலக நாடுகள் கடும் ஆத்திரத்தில் உள்ளன. குறிப்பாக பிரிட்டன் மற்றும் கனடா நாடுகளின் பிரதமர்கள், ஈரானுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
 
இந்த நிலையில் பிரிட்டன் நாட்டின் தூதரை ஈரான் அரசு திடீரென கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் தூதர் ராப் மெக்கைர் என்பவரை ஈரான் பாதுகாப்புப் படையினர் சில மணிநேரம் தடுப்புக் காவலில் வைத்திருந்ததாகவும் அதன் பின்னர் அவரை விடுதலை செய்ததாகவும் வெளிவந்துள்ள தகவலால் பிரிட்டன் கடும் அதிருப்தியில் உள்ளது. ஈரானில் பொதுமக்களிடையே போராட்டத்தை தூண்டிய குற்றச்சாட்டில் பிரிட்டன் தூதரை கைது செய்ததாக ஈரான் அரசு விளக்கம் அளித்துள்ளது.
 
இருப்பினும் ஒரு நாட்டின் தூதரை கைது செய்வது சர்வதேச விதிகளை மீறிய செயல் என பிரிட்டன் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் ஈரான் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என அமெரிக்காவும் வலியுறுத்தியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்