ஒரு வழியாக நிறைவேறியது பிரெக்ஸிட் ஒப்பந்தம்..

Arun Prasath
வியாழன், 17 அக்டோபர் 2019 (16:21 IST)
பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பாக நீண்ட காலம் இழுப்பறி நடந்த நிலையில் தற்போது உடன்பாடு எற்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் விலக பிரெக்ஸிட் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் ஓப்புதல் பெற பல முறை முயற்சி செய்த முன்னாள் பிரதமர் தெரசா மே, அம்முயற்சியில் தோல்வி அடைந்ததால், தெரசா மே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அடுத்து பிரதமராக பதவியேற்ற போரிஸ் ஜான்சன், ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது உறுதி, என அறிவித்திருந்தார். இதை தொடர்ந்து பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பாக நீண்ட காலமாக இழுப்பறி நடந்த நிலையில், தற்போது ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரெக்ஸிட் உடன்பாடு எற்பட்டுள்ளது. பிரசல்ஸில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சனிக்கிழமை இது குறித்து நாடாளுமன்றம் கூடுவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்