முதலையாகலாம், பெண்களுக்கு தாடி வளரலாம், ஆண்கள் பெண்களாகலாம்... Vaccine கொடுக்கும் ஷாக்!!

Webdunia
திங்கள், 21 டிசம்பர் 2020 (09:26 IST)
கொரோனா தடுப்பு மருந்து பக்க விளைவுகளுக்கு பிரேசில் அரசு பொறுப்பு ஏற்காது என அந்நாட்டு அதிபர் ஜய்ல் போல்சானரோ பேச்சு. 
 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டிபிடிக்கப்பட்டு அவை மனித பயன்பாட்டிற்கும் வந்துள்ளது. அதிலும் குறிப்பாக பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி நல்ல பல தருவதால் இங்கிலாந்த், அமெரிக்கா உள்ள நாடுகளில் இவற்றை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 
 
இந்நிலையில் கொரோனா பாதித்தவர்கள் அதிகமுள்ள நாடுகளில் 2பது இடத்தில் இருக்கும் பிரேசிலில் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தடுப்புப்பூசி குறித்து பீதியை ஏற்படுத்தும் வகையில் அந்நாட்டு அதிபர் ஜய்ல் போல்சானரோ பேசியுள்ளார். 
அவர் கூறியதாவது, நான் கோவிட் தடுப்பு மருந்தை போட்டுக்கொள்ளப்போவதில்லை. அது ஆண்களை பெண்மை மிகுந்தவர்களாக மாற்றி விடலாம், பெண்களுக்கு தாடி மீசை வளர வைத்து விடலாம். அவ்வளவு ஏன் மனிதர்கள் எல்லோரும் முதலைகளாக கூட மாறி விடலாம். எனவே தடுப்பு மருந்து பக்க விளைவுகளுக்கு பிரேசில் அரசு பொறுப்பு ஏற்காது என தெரிவித்துள்ளார். 
 
அதிபரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் மக்கள் கொரோனா தடுப்பு மருந்து பயன்படுத்தலாமா வேண்டாமா என்ற குழப்பமான கூழ்நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்