கடந்த ஒரு மாதத்திற்கு முன்னால் இஸ்ரேல் பிரதமர் வீட்டில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய நிலையில், நேற்று மீண்டும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீட்டில் நேற்று மாலை திடீரென வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஆனால் சம்பவம் நடந்த போது பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இல்லாததால் உயிரிழப்பு எதுவும் இல்லை என்றும் இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் கார்ட்ஸ் என்பவர் தெரிவித்தார்.
பிரதமர் வீட்டில் நடந்த தாக்குதலில் இரண்டு வெடிகுண்டுகள் அவரது தோட்டத்தில் விழுந்த காட்சியின் சிசிடிவியும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்திற்கு இஸ்ரேல் அதிபர் ஐசக் கார்க் என்பவர் கடும் கண்டனம் தெரிவித்தார். இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பினரும் பொறுப்பேற்கவில்லை என்றும், இது குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
அக்டோபர் 16ஆம் தேதி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இரண்டு முறை தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும், இஸ்ரேல் பிரதமர் வீட்டில் இல்லாததால் உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.