பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான BMW நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்த 15 லட்சம் கார்களை திரும்ப பெற போவதாக அறிவித்துள்ளது.
உயர் ரக கார் பிரியர்கள் BMW கார் மாடல்களை வாங்க போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஜெர்மனி கார் நிறுவனமான BMW அதிரடியாக 15 லட்சம் கார்களை திரும்ப பெற போவதாக அறிவித்துள்ளது.
சமீபத்தில் கார் பிரேக்குகளில் கோளாறு அதிகமாக இருப்பதாக புகார் வந்ததை அடுத்து 2022 ஜூன் மற்றும் 2024 ஆகஸ்ட் ஆகிய ஆண்டுகளுக்கு இடையே தயாரிக்கப்பட்ட கார்களை திரும்ப பெறுவதாக நிறுவனம் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன
பி.எம்.டபிள்யூ. எக்ஸ், மாடல்களான X3 மற்றும் X4, X5 மற்றும் X7 சீரிஸ், ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர், மினிகூப்பர் மற்றும் கண்ட்ரிமேன் ஆகிய கார்களில் பிரேக் கோளாறு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த வகை கார்கள் சுமார் 15.3 லட்சம் உற்பத்தி செய்யப்பட்டுள்ள நிலையில் 12 லட்சம் கார்கள் வாடிக்கையாளரிடமும், சுமார் 3,20,000 கார்கள் டீலர் ஸ்டாக்கில் உள்ளதாகவும் தெரிகிறது.
இந்த 15 லட்சம் கார்கள் திரும்பப் பெற முடிவு BMW செய்துள்ளதாகவும் இதுகுறித்த நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.