அம்மாடி..! எவ்ளோ பெரிய திருக்கை மீன்!! – உலகிலேயே மிகப்பெரிய மீன் சிக்கியது!

புதன், 22 ஜூன் 2022 (12:45 IST)
கம்போடியா நாட்டின் ஆற்றில் உலகிலேயே மிகப்பெரிய திருக்கை மீன் சிக்கியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கம்போடியாவின் மெகாங் பகுதியில் உள்ள மெகாங் ஆற்றில் மீனவர்கள் வழக்கம்போல மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது வலையில் கனமான மீன் சிக்கியதை உணர்ந்த அவர்கள் அதை கரையோரமாக கொண்டு வந்துள்ளனர். வலையில் பார்த்தபோது பிரம்மாண்டமான திருக்கை மீன் இருந்ததை கண்டு அவர்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மீன்வள ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்து ஆராய்ந்ததில் அந்த திருக்கை மீன் 13 அடி நீளமும், 330 கிலோ எடையும் கொண்டதாக இருந்துள்ளது. நன்னீரில் வாழும் இந்த திருக்கை மீன் இதுவரை நன்னீரில் கண்டறியப்பட்ட மீன்களிலேயே முகவும் பெரிய மீன் என சாதனை படைத்துள்ளது. அதன் உடலில் சிறிய மின்னணு சாதனையை பொருத்தி மீண்டும் அதை ஆற்றிலேயே விட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் நன்னீர் உயிரினங்கள் அதிகமாக வாழும் ஆற்றுப்பகுதிகளில் மெகாங் ஆறு மூன்றாவது இடத்தில் உள்ளது. அங்கு இவ்வளவு பெரிய திருக்கை மீன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்