இதுவொரு வெளிநாட்டு சுசிலீக்ஸ்: அதிர்ச்சியில் பாப் பாடகர் ஜஸ்டின் பீபர்

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2017 (00:45 IST)
சமீபத்தில் பிரபல பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கம் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டு அதில் முன்னணி நடிகர், நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



 
 
இந்த நிலையில் உலகப்புகழ் பெற்ற பாப் பாடகர் ஜஸ்டின் பீபரின் முன்னாள் காதலி செலீனாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டு அதில் ஜஸ்டின் பீபரின் நிர்வாண படங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் உடனே செலீனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை மீட்டு அதில் பதிவு செய்திருந்த அனைத்து நிர்வாண படங்களையும் டெலிட் செய்தார். இந்த நிர்வாண படங்கள் கடந்த 2015ஆம் ஆண்டு பீபர்-செலீனா நட்புடன் இருந்த காலத்தில் ஒரு சுற்றுலா பயணத்தின்போது எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 
அடுத்த கட்டுரையில்