அமெரிக்காவில் பூட்டிய வீட்டிற்குள் நுழைந்த கரடி பியானோ வாசித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் ஒருவர் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, அவரது சமயலறை குப்பை போல் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். திருடர்கள் வந்துள்ளனர் என எண்ணி காவல்துறையில் புகார் அளித்தார்.
இதையடுத்து வீட்டுக்கு வந்த காவல்துறையினர் அங்கு இருந்த சிசிடிவி கேமராவை சோதனை செய்தனர். அதில் வீட்டிற்குள் நுழைந்தது திருடன் இல்லை கரடி என தெரியவந்தது.
வீட்டிற்குள் நுழைந்த கரடி சகஜமாக வீட்டிற்குள் உலாவி, பியானோ வாசித்து பின் சமயலறைக்குள் சென்று நாசம் செய்துள்ளது. இவை அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையதளங்த்தில் வைரலாக பரவி வருகிறது.