தேர்தல் தாமதம் அரசியலமைப்புக்கு எதிரானதாக அமையும் என்றும், அதனால் ஜனாதிபதி ஷஹபுதீனை அவசர நிலையை அறிவிக்க ராணுவம் அழுத்தம் அளிக்கக்கூடும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. அரசியலமைப்பின் பிரிவு 58 மூலம் அவசரநிலை அதிகாரங்களை ஜனாதிபதி வழங்கலாம்.
2007-இல் ராணுவ ஆதரவு பெற்ற இடைக்கால அரசு இதேபோல் செயல்பட்டது. யூனுஸின் திட்டங்களை நாட்டின் நிலைத்தன்மைக்கு ஆபத்தாக காட்டி ராணுவ நடவடிக்கை எடுக்க ஜமான் தீவிரமாக செயற்படுகிறார் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனவே இடைக்கால அதிபர் யூனுஸ் எப்போது வேண்டுமானாலும் ராஜினாமா செய்வார் அல்லது நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.